வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By

சிறுநீரை அடக்குவதன் மூலம் ஏற்படும் ஆபத்துக்கள்...!

சிறுநீரை அதிகமாக அடக்கும் போது, பல உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்திவிடும். நீண்ட நேரம் சிறுநீர் கழிக்காமல் இருந்தால், ஒருவித அசௌகரியத்தை உணரக்கூடும். மேலும் அடிவயிற்றில் சிறுநீர்ப்பை உள்ள இடத்தில் கடுமையான வலியை சந்திக்க நேரிடும்.
சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளவர்களின் உடலில் சிறுநீரை அடக்கும் திறனை இழந்து விடுவதால் அவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும். அதேபோல்  கர்ப்பிணி பெண்களின் கர்ப்பப்பை சிறுநீரக பையை முட்டுவதால் அவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றும்.
 
சிறுநீரை அடக்குவதால் இடுப்பு மடி தசைகள் பலவீனம் அடையும், அதனால் உடல் எடையை இழக்க நேரிடும். நீண்ட நேரம் அடக்கிய சிறுநீர் வெளியேறும் போது அதிக வலியை ஏற்படுத்தும், அதன் பின் சுகாதாரம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்.
 
சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைத்திருந்தால், கவனச்சிதறல் ஏற்படும். கவனச்சிதறல் மிகவும் ஆபத்தானது. கவனச்சிதறல் ஏற்பட்டால், எந்த ஒரு  வேலையையும் சரியாக செய்ய முடியாது. உதாரணமாக, பைக்கில் பயணம் மேற்கொள்ளும் போது வந்து, அதனை நீண்ட நேரமாக அடக்கிக் கொண்டே பைக்  ஓட்டினால், சரியாக வண்டி ஓட்ட முடியாமல் போய், பின் அது விபத்துகளுக்கு வழிவகுக்கும்.
 
வெகுநேரம் சிறுநீரை அடக்கினால், சிறுநீர்ப்பை நிறைந்து, பின் சிறுநீர்ப்பையில் தீவிர நோய்த்தொற்றுகள் ஏற்படக்கூடும். மேலும் இப்பழக்கம் நீடித்தால், சிறுநீர்ப்பையில் அழுத்தம் அதிகரித்து, தாங்கும் திறன் இழக்கப்பட்டு, அதுவே நாளடைவில் உடல் முழுவதும் சிறுநீரில் உள்ள நச்சுக்களை பரவச் செய்து  உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
 
சிறுநீர்ப்பை நீண்ட நேரம் நிறைந்திருந்தால், அது சிறுநீரகத்தை பாதித்து, பின் தீவிரமான நிலைக்கு தள்ளிவிடுவதோடு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.  நமது சிறுநீரக பை 400-500 மில்லி லிட்டர் அளவு வரையிலான சிறுநீரை மட்டுமே தேக்கி வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.