ஹெச்.ராஜாவுக்கு சிறுநீர் துறை - கலாய்த்த தினகரன்

Last Modified புதன், 11 ஜூலை 2018 (17:52 IST)
அமித்ஷா சொட்டு நீர் பாசனம் என ஹிந்தியில் கூறியதை ஹெச்.ராஜா சிறுநீர் பாசனம் என மொழி பெயர்த்துதான் தற்போது சமூக வலைத்தளங்களில் ஹைலைட். 

 
கடந்த 2 நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் ஹெச்.ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர். ஹெச்.ராஜா கூறியதை கிண்டலடித்து பல மீம்ஸ்களையும் உருவாக்கி பதிவு செய்து வருகின்றனர்.
 
இந்நிலையில், இன்று திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன் “ தமிழகத்தில் கழகங்கள் இல்லாத ஆட்சியை அமைப்போம் என கூறும் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நுண் நீருக்கும் சிறுநீருக்கும் வித்தியாசம் தெரியாத ஹெச்.ரஜாவுக்கு சிறுநீர் துறையை கொடுப்பார்கள் என நினைக்கிறேன். இதுதான் பாஜகவின் இன்றைய நிலை” என கிண்டலாக பேட்டியளித்தார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :