குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுவதை பார்ப்போம்.
பருவமழை நேரத்தில் குழந்தைகளுக்கு காய்ச்சல் வருவது சகஜம் என்றாலும் காய்ச்சல் அதிகமாக இருந்தால் அதாவது 103 டிகிரிக்கும் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்றும் அது மூளை காய்ச்சலின் அறிகுறியாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூளைக்காய்ச்சலை ஆரம்ப நிலையில் கண்டுபிடித்தால் எளிதில் குணம் ஆகி விடலாம் என்றும் பள்ளியில் ஒரு குழந்தைக்கு மூளை காய்ச்சல் இருந்தால் அது மற்றவருக்கும் எளிதாக பரவிய விடும் என்பதால் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குழந்தைகளுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட மாதங்களில் தவறாமல் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் அதிகம் சளி பிடிக்கும் குழந்தைகளுக்கு பன்றி காய்ச்சல் தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
காய்ச்சல் இருக்கும் குழந்தைகள் கை குட்டையை வைத்து இருமுவதற்கு பழகி கொடுக்க வேண்டும் என்றும் அடிக்கடி கைகளை கழுவவும் சொல்லி தர வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
Edited by Mahendran