திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 4 ஆகஸ்ட் 2024 (14:17 IST)

கோயில் சுவர் இடிந்து பயங்கர விபத்து.! ம.பி.யில் 9 குழந்தைகள் பலி.!!

Temple Death
மத்திய பிரதேசத்தில் கோயில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 9 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
மத்திய பிரதேசத்தில் சாகர் மாவட்டம் சாஹ்பூரில் 50 ஆண்டுகள் பழமையான ஹர்தவுல் பாபா கோயில் உள்ளது. இந்த கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 

அப்போது திடீரென கோயில் சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.   பலர் இடிபாடுகளில் சிக்கிய நிலையில், 9 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

 
படுகாயம் அடைந்த மேலும் பலர் மீட்கப்பட்டு  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.