நெருங்கிவிட்டது மழைக்காலம்.. இருமல் சளி தொல்லையில் இருந்து தப்பிப்பது எப்படி?
மழைக்காலம் வந்துவிட்டாலே பலருக்கு ஜலதோஷம் சளி இருமல் ஆகிய நோய்கள் வருவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தற்போது மழைக்காலம் நெருங்கிவிட்டபடியால் இருமல் சளியில் இருந்து எப்படி தப்பிக்கலாம் என்பதை பார்ப்போம்.
ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி செய்தல், சரியான தூக்கம் ஆகியவை இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அதேபோல் சத்தான காய்கறிகள் பழங்கள் மூலிகைகள் ஆகியவற்றை சாப்பிட்டு வந்தால் சளி இருமல் போன்ற நோய்கள் வராது.
அதையும் மீறி வந்து விட்டது என்றால் ஏலக்காய், வெற்றிலை, மிளகு, கிராம்பு, தேன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு அவற்றை பீடா மாதிரி மடித்து சாப்பிட வேண்டும்.
முதலில் இனிப்பாக இருந்தாலும் சாப்பிட்டு முடிக்கும் போது அதன் காரம் தெரியும். ஒரு நாளைக்கு ஒரு தடவை என மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் நிச்சயம் சளி இருமல் குணமாகும்.
Edited by Mahendran