வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 செப்டம்பர் 2023 (20:49 IST)

உதவியாளர்களுக்கு லேப்டாப் பரிசளித்த பிரபல இயக்குனர்

Chandramukhi-2
சந்திரமுகி 2  இயக்குனர் பி.வாசு தன் பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.அப்போது,   தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கினார்.
 
ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத் நடிப்பில்  பி.வாசு இயக்கத்தில்  எம்எம் கீரவாணி இசையில் உருவான திரைப்படம் சந்திரமுகி 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து, இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.

இப்படம் செப்டம்பர் 15ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  லைகா நிறுவனம் தொழில் நுட்ப தாமதம் காரணமாக சந்திரமுகி 2 படம் வரும் செப்டம்பர் 28 ஆம் தேதி ரிலீஸாகும் என்று லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இப்படத்தின் புரமோசன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இயக்குனர் பி.வாசு தன் பிறந்த நாளை படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடினார்.

அப்போது, தனது உதவியாளர்களுக்கு லேப்டாப்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியின்போது, நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் ஜி.கே.எம்.தமிழ்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.