ஒரே மாதத்தில் 100 கோடி: அசத்தும் சியோமி விற்பனை!!


Sugapriya Prakash| Last Updated: புதன், 4 அக்டோபர் 2017 (21:40 IST)
சியோமி நிறுவனம் ஒரு மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது. 

 
 
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கலை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
 
இதில் சியோமி ரெட்மி நோட் 4 அதிகம் விற்பனையான ஸ்மார்ட்போன் என கூறப்படுகிறது. இதற்கு முன்னர் நடைபெற்ற  இரண்டு நாட்கள் சிறப்பு விற்பனையிலும் பத்து லட்சத்திற்கும் அதிகமான ஸ்மார்ட்போன்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
 
மேலும், குறிப்பிட்ட சில மாடல்களின் விநியோகம் மும்முரகமாக நடைபெற்று வருவதாகவும், அதிகப்படியான தட்டுப்பாடு காரணமாக அதிகப்படியான ஸ்மார்ட்போன்களை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
 


இதில் மேலும் படிக்கவும் :