இதுதான்யா ஆஃபர்.... ரூ.44,990 ஸ்மார்ட்போன் ரூ1947-க்கு!

Last Modified திங்கள், 6 ஆகஸ்ட் 2018 (14:54 IST)
பெரும்பாலான ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் விழாக்காலங்களில் அல்லது சிறப்பு தினங்களில் ஆஃபர்களை வழங்குவது வழக்கமான ஒன்றுதான். ஆனால், விவோ வழங்கி இருக்கும் ஆஃபர், ஆஃபர்களையே மிஞ்சும் அளவில் உள்ளது. 
வரும் 15 ஆம் தேதி இந்தியாவின் 72 வது சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு விவோ ஸ்மார்ட்போன் நிறுவனம் இன்று நள்ளிரவு முதல் 9 ஆம் தேதி வரை சலுகைகளை அறிவித்துள்ளது. 
 
ஆம், 44,990 ரூபாய் மதிப்புள்ள விவோ நெக்ஸ் ஸ்மார்ட்போனை 1947 ரூபாய்க்கு வழங்குவதாக விவோ அறிவித்துள்ளது. விவோ போர்ட்டல், அங்காடிகளிலும் இந்த சலுகைகளை பெறலாம். மேலும், இயர்போன், யுஎஸ்பி சார்ஜிங்க கேபிள் ஆகியவை வெறும் 72 ரூபாய்க்கு கேஷ் பேக்குடன் விற்கப்படவுள்ளது. 
 
இந்த சலுகை இன்று நள்ளிரவு துவங்கி, விற்பனை 3 நாள் நள்ளிரவு மட்டும் தொடரும் என்று விவோ கூறியுள்ளது. இதோடு, குறிப்பிட்ட பொருட்களுக்கு தள்ளுபடி, கேஷ்பேக் மற்றும் கூப்பன்களும் வழங்கப்படும். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :