1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 2 ஆகஸ்ட் 2018 (14:34 IST)

வருமானம் இன்றி தவிக்கும் பிஎஸ்என்எல்: சிக்கலில் அரசு!

பிஎஸ்என்எல் கடந்து மூன்று ஆண்டுகளாக நஷ்டத்தை சந்தித்து வருவதால், பிஎஸ்என்எல் நிறுவனம் வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனம் என டிபிஈயின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப அறிவிக்கப்பட்டுள்ளது. 
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் 2017-18 நிதியாண்டில் ரூ.4,785 கோடி நஷ்டம் அடைந்திருக்கிறது. அதேபோல், வருவாய் ரூ.27,818 கோடியாக குறைந்திருக்கிறது. 
 
2015-16 நிதியாண்டில் ரூ.4,859 கோடியும், 2016-17 நிதியாண்டில் ரூ.4,786 கோடியும் நஷ்டத்தை சந்தித்தது. இந்த ஆண்டு நஷ்டத்தின் அலவி சிறிது குறைந்திருந்தாலும் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நஷ்டத்தை சந்தித்துள்ளதால் அரசு சிக்கலில் உள்ளது. 
 
எனவே, பொதுத்துறை அமைப்புகள் துறையின் (டிபிஈ) அறிவுறுத்தலுக்கு ஏற்ப வலுகுறைந்த பாதிக்கப்பட்ட நிறுவனமாக பிஎஸ்என்எல் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மற்றொரு பொதுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான எம்டிஎன்எல்-லும் நஷ்டத்தை சந்தித்துள்ளதால், பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் நிறுவனங்களை ஒன்றாக இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.