ஸ்மார்ட்போன் ஆர்டர் செய்தால் விம்சோப் டெலிவர் செய்த பிளிப்கார்ட்!!
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட் வாடிக்கையாளர் ஆர்டர் செய்த ஸ்மார்ட்போனுக்கு பதிலாக 6 விம்சோப்பை அனுப்பிய சம்பவம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் ஸாப்பிங் தளங்களில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நம்பகத்தன்மை உடையதாக கருதப்படுகிறது. ஆனால், அங்கும் சில குளறுபடிகள் நடைபெருகின்றன. இதனால், வாடிக்கையாளர்கள் மத்தியில் நிறுவனங்கள் நம்பகத்தன்மையை இழக்கின்றன.
அந்த வகையில், சமீபத்தில் நடந்துள்ள சம்பவம் பிளிப்கார்ட் நிறுவனத்தின் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சயனி பேனர்ஜி என்ற பெண் ஒருவர் பிளிப்கார்ட்டில் கடந்த 26 ஆம் தேதி ஓப்போ F5 Gold (32 GB) ஆர்டர் செய்துள்ளார். இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.19,990 கொடுத்துள்ளார்.
ஆனால், அவருக்கு டெலிவரி செய்யப்பட்டது 6 விம் சோப்புகள். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ளார். அவரது பதிவு பின்வருமாறு, ஓப்போ ஸ்மார்ட்போனை ரூ.19,990-க்கு ஆர்டர் செய்தால் 6 சோப் கொடுக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட்டின் தரம் குறைந்துவிட்டது.
இதனை எதிர்த்து புகார் அளித்தற்கு என்னை 10 ஆம் தேதி வரை காத்திருக்குமாரு கூறியுள்ளனர். இதுவே எனது கடைசி பிளிப்கார்ட் ஆர்டர். இனி பிளிபகார்ட் தளத்தில் எந்த பொருட்களையும் வாங்க மாட்டேன் என கூறியுள்ளார்.