120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிவு


Abimukatheesh| Last Updated: திங்கள், 10 ஜூலை 2017 (12:12 IST)
சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது.

 
 
         screen shot of data Credit: Twitter

கடந்த ஆண்டு இலவச 4ஜி டேட்டாவுடன் களமிறங்கியது ஜியோ நிறுவனம். தற்போது ஜியோவின் வாடிக்கையாளர்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது. இலவச சேவையை துண்டித்து கட்டண சேவையை வழங்கி வருகிறது. ஜியோ சிம் கார்டு பெற வாடிக்கையாளர்களிடம் அடையாளத்திற்கு ஆதார் எண் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சுமார் 120 மில்லியன் ஜியோ வாடிக்கையாளர்களின் தகவல்கள் கசிந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் இதுவே இந்தியாவின் மிகப்பெரிய தரவு மீறலாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
ஏற்கனவே நாட்டு மக்களின் தகவல்கள் ஆதார் மூலம் திருடப்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் மத்திய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற நிகழ்வு ஜியோவால் நடந்துள்ளது என செய்தி வெளியாகியுள்ளது. 
 
ஆதார் மூலம் மக்களின் தகவல்கள் திருடப்பட்டால் அவர்களது வங்கி எண் முதல் பான் எண் வரை அனைத்து தகவல்கள் கசிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் தொழில்நுட்ப பிரிவின் பாதுகாப்பு அம்சங்கள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் இந்திய அரசின் இணையதளம் மற்றும் கணினியை எளிதாக ஹேக் செய்து தகவல்கள் திருட முடியும்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :