1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 அக்டோபர் 2019 (17:06 IST)

போட்ரா வெடிய... BSNL 4ஜி -க்கு ஒப்புதல்: இனிமே இருக்கு அசல் ஆட்டம்!!

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு  மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
கடந்த சில தினகங்களாக டிவிட்டரில் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மீதான தங்களது அன்மை டிரெண்டாக்கி வெளிப்படுத்தி வந்தனர். குறிப்பாக பிஎஸ்என்எல் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுப்பட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களை போன்று தங்களது போட்டிக்கு லாபத்திற்கும் ஏற்றவாறு மாற்றங்களை மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்காக செயல்ப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மீது தங்களது அன்பை மொத்தமாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.  
 
தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.  
 
இதற்கு ஏற்ப தற்போது பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி உரிமம் வழங்க மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
இதனுடன்  பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும். பிஎஸ்என்எல்-லில் விருப்ப ஓய்வு பெறுவோருக்கு சிறப்பு ஓய்வூதிய தொகுப்பு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.