BSNL ஃபார் லைஃப்: மொத்த அன்பையும் பிழிந்த வாடிக்கையாளர்கள்!!
காலையில் இருந்து டிவிட்டரில் பிஎஸ்என்எல் குறித்த ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டாகிய வண்ணம் உள்ளது.
மைக்ரோ பிளாகிங் தளத்தில் முதலில் பிஎஸ்என்எல் 4ஜி பிரபலமானதை தொடர்ந்து, டிவிட்டரில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் #Switch_To_BSNL டிரெண்டானது. தற்போது #IndianeedBSNL என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதனோடு #BSNL_Revival என்ற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
குறிப்பாக பிஎஸ்என்எல் எப்போதும் தேசத்தின் சேவையில் ஈடுப்பட்டு வருகிறது. மற்ற நிறுவனங்களை போன்று தங்களது போட்டிக்கு லாபத்திற்கும் ஏற்றவாறு மாற்றங்களை மேற்கொள்ளாமல் வாடிக்கையாளர்களுக்காக செயல்ப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் மீது தங்களது அன்பை மொத்தமாக கொட்டி தீர்த்து வருகின்றனர்.
தற்போதைய நிலவரப்படி, பிஎஸ்என்எல் 4ஜி சேவைகள் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி தனது 4ஜி சேவையை துவங்க இது சரியான நேரம் என்றும் வர்த்தக்க வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.