Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

முன்னணி இடத்தை பிடிக்க வோடபோன், ஐடியா புதிய ப்ளான்!!


Sugapriya Prakash| Last Updated: திங்கள், 13 நவம்பர் 2017 (16:36 IST)
தொலைத்தொடர்ப்பு சேவைகளை தவிர்த்து தற்போது சேவையை அளிக்க தேவைப்படும் டவர் வர்த்தகத்திலும் முன்னனி நிறுவனங்களுக்கு மத்தியில் போட்டி ஏற்பட்டுள்ளது.

 
 
டெலிகாம் சந்தையில் புதிய ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் பிர்லா குழுமத்தின் ஐடியா நிறுவனமும், பிரிட்டன் நாட்டின் வோடபோன் இந்தியாவும் இணைய திட்டமிட்டது. 
 
இந்திய டெலிகாம் வர்த்தகத்தில் 2 வது மற்றும் 3 வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பின் மூலம் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான உருவெடுக்கும். 
 
இந்தியா முழுவதும் ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் சுமார் 20,000 டவர்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
டவர் வர்த்தகத்தை முழுமையாக ஏசிடி நிறுவனத்திற்கு சுமார் 7,850 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 
 
இந்த நிறுவனத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் ஐடியா 3,850 கோடி ரூபாயும், வோடபோன் 4,000 கோடி ரூபாயும் பெறும். 
 
ஐடியா வோடபோன் இணைந்து இது போல இன்னும் பல மாற்றங்களை கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :