சசிகலா குடும்பத்துக்காக வரிந்துகட்டும் தா.பாண்டியன் (வீடியோ இணைப்பு)

சசிகலா குடும்பத்துக்காக வரிந்துகட்டும் தா.பாண்டியன் (வீடியோ இணைப்பு)


Caston| Last Updated: திங்கள், 13 நவம்பர் 2017 (12:34 IST)
வருமான வரித்துறையினர் கடந்த சில தினங்களாக சசிகலா குடும்பத்தினரை குறி வைத்து அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் நிலவி வரும் சூழலில் இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் சசிகலா குடும்பத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார்.

 


 
 
சசிகலா குடும்பத்தை சேர்ந்த அனைவரது வீடுகளிலும், நிறுவனங்களிலும் அதிரடி சோதனை நடத்தி பல்வேறு ஆவணங்களும் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பும் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வருகின்றன. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த வருமான வரி சோதனையை தற்போது நடத்தியது அரசியல் உள் நோக்கம் கொண்டது என கூறுகின்றனர் ஒரு தரப்பினர்.
 
இதற்கு ஆதரவாக இந்திய கம்யூணிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் பொங்கியுள்ளார். சசிகலா, மற்றும் ஜெயலலிதா மீது அதீத பாசம் கொண்டவர் தா.பாண்டியன். பல்வேறு கட்டங்களில் இவர் அதிமுகவுக்கு ஆதரவாக இருந்துள்ளார். கூட்டணியில் இருந்து விலகிய பின்னரும் அதிமுகவுக்கு ஆதரவாகவே பேசி வந்தார் இவர்.
 

 
 
இந்நிலையில் தற்போதும் தா.பாண்டியன் தனது சசிகலா குடும்பத்தின் மீதான அதீத பாசத்தை காட்டி தொலைக்காட்சி விவாதத்தில் பொங்கியுள்ளார். சசிகலா குடும்பத்தினர் அரசியலுக்கு வரும் முன்னரே மருத்துவர்களாக இருந்துள்ளனர். நிறுவனங்கள் வைத்திருந்தனர், அவர்கள் நல்ல நிலையில் இருந்தவர்கள் தான். இது சசிகலா குடும்பத்தின் மீதான தாக்குதல் அல்ல, தமிழகத்தின் மீதான தாக்குதல் என கூறியுள்ளார் தா.பாண்டியன்.


இதில் மேலும் படிக்கவும் :