Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆதார் மொபைல் எண் இணைப்பு: மத்திய அரசின் திட்டவட்ட அறிவிப்பு...


Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 3 நவம்பர் 2017 (16:18 IST)
ஆதார் எண்ணுடன் மொபைல் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், இதை எதிர்த்து பல கண்டங்கள் எழுந்தன.
 
 
ஆதார் மற்றும் மொபைல் எண் இணைப்பை எதிர்த்து மேற்கு வங்கத்தில் அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. >  
இந்த வழக்கில், மத்திய அரசுக்கு நான்கு வாரங்களில் ஆதார் இணைப்பின் கட்டாயம் குறித்து விளக்கமளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது.>  
இந்நிலையில், இன்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் சமர்ப்பிக்கப்பட்டது. அதில், ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தான் கடந்த 2017 பிப்ரவரி 6 ஆம் தேதி அன்று உத்தரவிட்டது.   
எனவே, இந்த உத்தரவை மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக மாற்றுவதற்கு தயாராக இல்லை என்றும்  வரும் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதிக்குள் ஆதார் எண்ணை மொபைல் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :