1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 13 ஜனவரி 2018 (17:27 IST)

அலிபாபாவுடன் இணையும் ஆந்திரா

அலிபாபா நிறுவனத்துடன் இணைந்து வேலையற்ற இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.

 
சீனாவைச் சேர்ந்த அலிபாபா நிறுவனம் ஆன்லைன் வர்த்தகத்தில் முன்னணி நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் ஆண்டுதோறும் பல கோடி ரூபாட் மதிப்பில் விற்பனை செய்து சாதனை படைத்து வருகிறது. இந்தியாவிலும் அலிபாபா நிறுவனம் தொழிலை விரிவுப்படுத்த முயற்சி எடுத்து வருகிறது. 
 
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் உள்ள வேலையற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாடு பயிற்சி அளிக்க அலிபாபா நிறுவனம் முடிவு செய்துள்ளது. இதற்காக அம்மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளது. 
 
இந்த திட்டத்தின் கீழ் 20 ஆயிரத்துக்கும் அதிகமான இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும் என அலிபாபா நிறுவனத்தின் இந்திய தலைவர் தெரிவித்துள்ளார்.