ஆந்திராவில் வைர மலை; உற்சாகத்தில் அரசு

Diamond
Last Updated: வெள்ளி, 12 ஜனவரி 2018 (19:51 IST)
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் வைர மலை கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.


ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் 100 ஏக்கர் பரப்பளவில் பழமை வாய்ந்த கோட்டை ஒன்று உள்ளது. இந்த சென்னம்பள்ளி கோட்டையை 16 நூற்றாண்டில் அரவீடு திம்மராஜா என்பவர் மலையை குடைந்து கட்டியுள்ளார்.
 
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் போர் தொடுத்தபோது மன்னர்கள் இந்த கோட்டையின் கீழ் உள்ள சுரங்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம் உள்ளிடவை அடங்கிய புதையலை பதுக்கி வைத்ததாகவும் கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் ஆந்திர மாநிலம் தொல்லியல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து கோட்டையில் கோட்டையில் புதையல் இருப்பதாக தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் தொல்லியல் துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் புதையல் எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
 
இந்த தேடலில் கிணறு வழியாக ஸ்கேனர் கருவிகளை கொண்டு ஸ்கேன் செய்ததில் கோட்டைக்கு செல்லும் வழியில் இருந்த தர்கா அருகே வைர மலை இருப்பது தெரியவந்துள்ளது. இதனை சுங்கத்துறை உதவி இயக்குநர் நடராஜன் செய்தியாளர்களுக்கு தெரிவித்தார்.
 
புதையலை தேடிய அரசுக்கு வைர மலை கிடைத்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வைர மலை உள்ள பகுதிக்கு சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :