1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 11 ஜனவரி 2018 (00:26 IST)

எம்.எல்.ஏக்களின் பிள்ளைகள் அரசுப்பள்ளியில் படிக்க வேண்டும்: சட்டம் கொண்டு வரும் சந்திரபாபு நாயுடு

அரசு பள்ளிகள் என்றாலே ஏழைகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளிகள் என்று கூறப்பட்டு வருகிறது. அரசு பள்ளிகளின் தரமும், தனியார் பள்ளிகளுக்கு நிகராக இல்லாததால் அந்த பள்ளிகளில் பணக்காரர்களும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளிகளுக்கு அனுப்புவதில்லை

இந்த நிலையில் ஆந்திர அரசு வெகுவிரைவில் எம்.எல்.ஏக்கள், எம்சிக்கள், அமைச்சர்கள் ஆகியோர்களின் குழந்தைகள் அரசு பள்ளியில் தான் படிக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வர ஆலோசித்து வருகிறது. இந்த தகவலை ஆந்திர மாநில அமைச்சர் பூமா அகிலா தெரிவித்துள்ளார்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க புரட்சிகரமான சட்டத்தை கொண்டு வருவதற்கு முன்னர் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுப்பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மட்டும் போதுமான மாணவர்களின் எண்ணிக்கை இல்லாததால் 9000 ஆரம்ப மற்றும் நடுநிலை அரசு பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.