செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 23 பிப்ரவரி 2018 (13:33 IST)

மீண்டும் செயல்பட தொடங்கியது ஏர்செல்! செயல்பட என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

கடந்த சில நாட்களாக ஏர்செல் வாடிக்கையாளர்கள் சேவை கிடைக்காமல் திண்டாடிய நிலையில் தற்போது மீண்டும் சேவை கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

தமிழகத்தில் ஏர்செல் சேவை நிறுத்தப்பட்டதாகவும், ஏர்செல் நிறுவனம் திவால் ஆகிவிட்டதாகவும் பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் ஏர்செல் நிறுவனம், இன்னும் நான்கு நாட்களில் சேவை தொடரும் என்று அறிவித்திருந்தது

இந்த நிலையில் சற்றுமுன் தமிழகத்தில் மீண்டும் ஏர்செல் சேவை தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது செல்போன்களை சுவிட்ச் ஆப் செய்து சில நொடிகள் கழித்து மீண்டும் சுவிட்ச் ஆன் செய்தால் ஏர்செல் நெட்வொர்க் செயல்படும் என ஏர்செல் தென்னிந்திய சி.இ.ஓ அறிவுறுத்தியுள்ளார். ஏர்செல் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதால் கடந்த சில நாட்களாக பெரும் அவதியில் இருந்த வாடிக்கையாளர்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர்.