திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (14:10 IST)

இந்திய அணியிடம் நாங்கள் கெஞ்சி கொண்டிருக்க முடியாது – பாகிஸ்தான் திமிர் பேச்சு

நடந்து வரும் உலக கோப்பை போட்டிகளில் முதன்முறையாக இந்தியா-பாகிஸ்தான் மோதி கொள்ளும் ஆட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் இஷான் மனி பேட்டியளித்தார்.

அப்போது இதுவரை பல நாடுகளுடன் இரு தரப்பு ஆட்டங்கள் ஆடும் பாகிஸ்தான் அணி இந்தியாவுடன் மட்டும் ஏன் விளையாடவில்லை? என நிருபர்கள் கேட்டதாக தெரிகிறது. அதற்கு பதிலளித்த இஷான் “இந்தியாவிட எங்களோடு வந்து கிரிக்கெட் விளையாடுங்கள் என்று நாங்கள் கெஞ்சி கொண்டிருக்க முடியாது. இந்தியாவுடனான இரு தரப்பு கிரிக்கெட் ஆட்டங்கள் மீண்டும் நடைபெற வேண்டும் என்றுதான் நாங்களும் விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.

சர்வதேச தொடர்களில் இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் விளையாடினாலும் இரு தரப்பு ஆட்டங்கள், உலக சுற்றுபயண ஆட்டங்களில் இரண்டு நாட்டு அணிகளும் உடன்பட்டு விளையாடியதே இல்லை. கடைசியாக 2013ல் இந்தியா-பாகிஸ்தான் விளையாடிய இரு தரப்பு ஆட்டம்தான் அவர்கள் ஆடிய கடைசி ஆட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.