திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 14 ஜூன் 2019 (15:25 IST)

அப்பாடா டாஸ் போட்டாச்சு… விட்டுக்கொடுத்த மழை … - தொடங்கியது இங்கிலாந்து வெஸ்ட் இண்டீஸ் போட்டி !

உலகக்கோப்பை தொடரில் கடந்த சில நாட்களாக மழையால் எந்த போட்டியும் நடக்காத நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும்  இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலானப் போட்டி டாஸ் போட்டு தொடங்கப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடர் கடந்த 30 ஆம் தேதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. இதுவரை 18 போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் 5 போட்டிகள்  மழையால் பாதிக்கப்பட்டன. நேற்றும் நேற்று  முன் தினமும் நடக்க இருந்த போட்டிகள் டாஸ் கூட போடாத நிலையில் மழையால் கைவிடப்பட்டன.

அதையடுத்து மூன்றாம் நாளான இன்று மழை விடுப்பு எடுத்துக்கொண்டதால் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலானப் போட்டி சவுத்டாம்பில் சற்று முன்னர் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் முதலில் பந்துவீச முடிவெடுத்துள்ளார்.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஓவர்கள் முடிவில்1 விக்கெட் இழப்புக்கு 8 ரன்களை சேர்த்துள்ளது.