திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வியாழன், 30 நவம்பர் 2023 (18:43 IST)

2031-ம் ஆண்டு உலகக் கோப்பையில் கோலி விளையாடுவாரா? ஆஸ்., வீரர் பதில்

2031 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கோலி விளையாட முடியாமல் போக எந்தக் காரணமும் இல்லை என ஆஸ்திரேலிய வீரர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரில்    இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென்னாப்பிரிக்கா, இலங்கை உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடின.  இதில், ஆஸ்திரேலியா இந்திய அணியை வீழ்த்தி கோப்பை வென்றது.

இத்தொடரில், இந்திய அணியைச் சேர்ந்த  விராட் கோலி, பேட்டிங்கில் அசத்தினார்.

அதிக ரன்கள் அடித்து இளம் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தார். இந்த நிலையில்,  வரும் 2031 உலகக் கோப்பையில் விராட் கலி விளையாடுவார் என நம்புவதாக ஒரு ரசிகர்கள்  வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.  இதுகுறித்து ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் பதில் அளித்துள்ளார்.

அதில், 2031 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கோலி விளையாட முடியாமல் போக எந்தக் காரணமும் இல்லை. அவர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளார். கிரிக்கெட்டை அதிகம் நேசிக்கிறார்.