1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 22 நவம்பர் 2024 (08:55 IST)

ஆடும் லெவனிள் அஸ்வின், சர்பராஸ் கான் இல்லாதது ஏன்?... கொந்தளிக்கும் ரசிகர்கள்

11 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் நிதீஷ்குமார் ரெட்டி மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் அறிமுகமாகியுள்ளனர். இந்நிலையில் இந்திய அணியில் அஸ்வின் மற்றும் சர்பராஸ் கான் ஆகியோர் இல்லாதது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உலகின் நம்பர் 1 பவுலரான அஸ்வின் பவுலராக மட்டும் இல்லாமல் ஆல்ரவுண்டராகவும் செயல்படக் கூடிய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே போல சர்பராஸ் கான் கடந்த சில போட்டிகளில் மிகச்சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வருகிறார்.

இந்திய ஆடும் லெவன் அணி
ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், படிக்கல், விராத் கோஹ்லி, ரிஷப் பண்ட், துருவ் ஜுரல், வாஷிங்டன் சுந்தர், நிதிஷ்குமார் ரெட்டி, ரானா, பும்ரா, சிராஜ்