புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 20 நவம்பர் 2024 (14:38 IST)

அவர் இருந்திருந்தா நாங்க எல்லாம் களைப்பாகிவிடுவோம்… இந்திய வீரர் குறித்து நிம்மதி பெருமூச்சு விட்ட ஆஸி பவுலர்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்தமுதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதால் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளார். தற்போது இரு அணிகளும் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆஸி அணியின் ஸ்டார் பவுலர் ஜோஷ் ஹேசில்வுட் இந்திய அணிக் குறித்து பேசும்போது “இந்திய அணியில் புஜாரா இல்லாதது நிம்மதியாக உள்ளது. அவர் இருந்தால், நீண்ட நேரம் பேட் செய்து எங்கள் அணி பவுலர்களை களைப்பாக்கி விடுவார்” எனக் கூறியுள்ளார்.