வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (11:00 IST)

முதல் டெஸ்ட்டில் இந்திய அணியின் பவுலிங் கூட்டணி என்ன?... வெளியான தகவல்!

ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நவம்பர் 22 ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இந்தமுதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, அவருக்குக் குழந்தை பிறந்துள்ளதால் கலந்துகொள்ளவில்லை. அவருக்கு பதில் கேப்டனாக பும்ரா செயல்படவுள்ளார்.

இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழல்பந்து வீச்சாளர் என்ற கூட்டணியோடு இந்திய அணி களமிறங்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அஸ்வின் மட்டுமே இந்திய அணியில் இடம்பெறுவார் எனத் தகவல்கல் வெளியாகியுள்ளன.