வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (11:20 IST)

43 ரன்களில் சுருண்ட வங்காளதேசம்; 158 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட்இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வங்காளதேச அணி 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 158 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
 
வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்காளதேசம் அணி 2 டெஸ்ட் கொண்ட போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி ஆண்டிகுவா மைதானத்தில் நேற்று தொடங்கியது.
 
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்காளதேச அணியின் வீக்கெட்டுகளை வெஸ்ட் இன்டீஸ் அணி பவுலர்கள் சீட்டுகட்டுகளை போல சரித்தனர். குறிப்பாக ரோச் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வங்காளதேச வீரர்கள் வந்த வேகத்தில் நடையை கட்டினர். இதனால் அந்த அணி 43 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகப்பட்சமாக ரோச் 5 வீக்கெட்டுகளையும், கம்மின்ஸ் 3 வீக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
 
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 201 ரன்கள் எடுத்து 158 ரன்கள் முன்னிலையில் உள்ளது. அதிகப்பட்சமாக பிராத்வெய்ட் 88 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.