1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 11 ஜூன் 2018 (13:27 IST)

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

இலங்கைக்கு எதிரான போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

 
 
வெஸ்ட்இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் தொடங்கியது.
 
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட்இண்டீஸ் அணி அபாரமாக பேட்டிங் செய்து 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டவுரிச் 125 ரன்கள் குவித்தார். இலங்கை அணி தரப்பில் குமாரா 4 வீக்கெட்டுகளை  கைப்பற்றினார். இதன் பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 185 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகப்பட்சமாக கேப்டன் தினேஷ் சண்டிமால் 44 ரன்கள் எடுத்தார். வெஸ்ட்இண்டீஸ் தரப்பில் மிகுவல் கம்மின்ஸ் 3 வீக்கெட்டுகளை கைப்பற்றினார்.
 
இதனையடுத்து, 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 72 ஓவர்களில் 7 வீக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் குவித்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. அதிகப்பட்சமாக கியரன் பவல் 88 ரன்கள் எடுத்தார்.
 
453 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணியில் குசால் மெண்டிஸ் தவிர வேறு யாரும் சிறப்பாக விளையாடாத காரணத்தினால் அந்த அணி  226 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகப்பட்சமாக குசால் மெண்டிஸ் 102 ரன்கள் எடுத்தார். இதனால் வெஸ்ட் இண்டிஸ் அணி 226 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.