திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 20 மார்ச் 2024 (13:56 IST)

“என்னை இனிமேல் அப்படி அழைக்காதீர்கள்…. கூச்சமாக இருக்கிறது”- கோலி ஓபன் டாக்!

ஐபிஎல் 2024 சீசன் மார்ச் 22 ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. முதல் போட்டியே சிஎஸ்கே மற்றும் பெங்களூர் அணிகள் மோதும் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது.

முதல் போட்டியில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர்கள் இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர். இதற்கு முன்னர் நேற்றிரவு ஆர் சி பி அணியின் வீரர்கள் கலந்துகொண்ட அன்பாக்ஸ் நிகழ்வு நடந்தது. அப்போது பேசிய கோலி என்னை கிங் என அழைக்காதீர்கள் எனக் கூறியுள்ளார்.

அதில் “என்னை கிங் என்று அழைத்தால் எனக்குக் கூச்சமாக இருக்கிறது. என்னை விராட் என்று அழைத்தால் போதும்” எனக் கூறியுள்ளார்.