மைதானத்தில் ஜெய் ஸ்ரீராம் விவகாரம்… ஐசிசியிடம் புகாரளித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்!
இந்தியா பாகிஸ்தான் போட்டியின் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் அவுட் ஆன போது சில ரசிகர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதற்கு ஒருசாரார் ஆதரவும் மற்றொரு சாரார் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த சர்ச்சை இப்போது கிரிக்கெட் உலகில் கடும் கண்டனங்களை பெற்று வரும் நிலையில் இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இப்போது ஐசிசி வசம் புகார் ஒன்றை அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்த புகாரை ஏற்றுக்கொண்ட ஐசிசி இது சம்மந்தமாக பிசிசிஐ-யிடம் விசாரணை நடத்த உள்ளதாக சொல்லப்படுகிறது.
மேலும் வீரர்களுக்கு பாதுகாப்பற்ற மைதானம் என அகமதாபாத் மைதானத்தை அறிவிக்கவும் வாய்ப்பிருக்கவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அறிவிக்கப்பட்டால் அந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடத்த முடியாமல் போகும் சூழலும் ஏற்பட வாய்ப்புள்ளது.