உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: தங்கம் வென்ற தமிழக வீராங்கனை
சீனாவில் நடைபெறும் உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் தங்கம் வென்றுள்ளார்.
தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பிரேசிலில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சூடு போட்டியில் தங்கம் வென்றுள்ளார்.
இந்நிலையில் சீனாவில் உலக கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டி நடைபெற்று வரும் நிலையில், பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன் பங்கேற்றார். அதன் இறுதிச் சுற்று இன்று நடைபெற்ற நிலையில் 250.8 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்றுள்ளார்.