திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 மார்ச் 2023 (09:10 IST)

நேற்றைய இன்னிங்ஸில் கோலி படைத்த சாதனை!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கோலிக்கு, இந்தியாவில் எப்படி ரசிகர்கள் அதிகமோ, அதுபோலவே பாகிஸ்தானிலும் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பலரும் கூட கோலியின் ரசிகர்களாக உள்ளன.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அவர் சதமடிக்கவில்லை. இப்போது ஆஸி அணிக்கு எதிராக நடந்துவரும் போட்டியில் அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் ஆடி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் இந்திய மண்ணியில் டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். போலவே ஆஸி. அணிக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.