திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 14 அக்டோபர் 2023 (07:29 IST)

7 மாதத்துக்குப் பிறகு முதல் போட்டியில் விளையாடிய வில்லியம்சன்… கையில் அடிபட்டு ரிட்டையர் ஹர்ட்!

ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக வில்லியம்சன் விரைவில் வர உள்ள 50 ஓவர் உலகக்கோப்பை தொடரிலும் விளையாட முடியாத சூழல் உருவாகலாம் என்ற அச்சம் இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அணியில் இணைக்கப்பட்டு கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் முதல் இரண்டு போட்டிகளில் அவர் விளையாடவில்லை. டாம் லாதம் அணியை வழிநடத்தினார். இந்நிலையில் நேற்று வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அவர் களமிறங்கினார். பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட அவர் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடினார்.

ஆனால் பேட்டிங் செய்யும் போது அவர் கையில் பந்து தாக்கியதால், ரீட்டையர்ட் ஹர்ட் ஆகி வெளியேறினார். இதனால் அவர் தொடர்ந்து உலகக் கோப்பை தொடரில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.