ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 மே 2023 (21:45 IST)

ஐபிஎல்-2023: கொல்கத்தா அணிக்கு , பஞ்சாப் கிங்ஸ் கொடுத்த இலக்கு இதுதான்!

பஞ்சாப் கிங்ஸ் அணி 179 ரன்கள் எடுத்து கொல்கத்தா அணிக்கு 180 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் -1 வது சீசன் கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி விளையாடி வருகிறது.

இன்றைய போட்டியில்  டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி,  பிரமிஸ்ரன் 12  ரன்களும், தவான் 57 ரன்களும், லிவிங்டன் 15 ரன்களும், ஷர்மா 21  ரன்களும், ரிஷி தவான் 19 ரன்களும், ஷாருக்காஅன் 21  ரன்களும் அடித்தனர்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து, கொல்கத்தா அணிக்கு 180 ரன்கள் வெற்றி நிர்ணயித்துள்ளது.

கொல்கத்தா அணி சார்பில் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும்,ரானா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.