திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 13 ஜூன் 2023 (08:06 IST)

வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் கழட்டி விடப்படும் புஜாரா? அணியில் பல அதிரடி மாற்றங்கள்!

இந்திய அணிக்கு அடுத்த கிரிக்கெட் போட்டிகளுக்கு பிறகு இப்போது ஒரு நீண்ட ஓய்வு கிடைத்துள்ளது. இனிமேல் ஜூலை மாதத்தில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்தான் இந்தியாவின் அடுத்த சீரிஸ்.

வெஸ்ட் இண்டீஸ் சென்று இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி 20 போட்டிகளை விளையாடுகிறது. இதற்கான அணித் தேர்வில் பல அதிரடி மாற்றங்கள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து மோசமாக விளையாடி வரும் செத்தேஷவர் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இடம்பெற மாட்டார்கள் என தெரிகிறது. அதுபோல டி 20 அணியில் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ரிங்கு சிங் , ருத்துராஜ் கெய்க்வாட், மோஹித் ஷர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரை இணைக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.