ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2023 (17:52 IST)

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: பாகிஸ்தான் அணி நம்பர் 1

India Pakistan
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் பாகிஸ்தான் அணி மீண்டும் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, நேபாளம், ஆப்கானிஸ்தான், பங்களதேஷ் ஆகிய 6 நாடுகள் பங்கேற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது.

6 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் இந்திய அணி 8வது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்தது.

இந்த நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒருநாள் கிரிக்கெட்டில் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தோற்றதால் ஆஸ்திரேலியா அணி   3 வது இடத்திற்கு சென்றது.  2வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியா அணி தோற்றதால் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

ஆசிய கோப்பையில், வங்கதேசத்திற்கு எதிராக தோற்றதால் பின் தங்கியுள்ள இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றினால் முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகிறது.