மனைவியை விவாகரத்து செய்யும் ஹர்திக் பாண்ட்யா… 70 சதவீதம் சொத்துகளை ஜீவனாம்சமாகக் கொடுக்கிறாரா?
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவுக்கும், நடிகை நடாஷாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்துக்கு முன்பே இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அவர்களுக்கு அகஸ்தியா என்ற மகன் பிறந்தார்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த பாண்ட்யா- அகஸ்தியா திருமண வாழ்வில் இப்போது விரிசல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாக ஹர்திக்கும் நடாஷாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக வட இந்திய ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் ஹர்திக் அவரது மனைவி நடாஷாவை விவாகரத்து செய்யும்பட்சத்தில் அவரின் சொத்துகளில் 70 சதவீதத்தை அவருக்கு ஜீவனாம்சமாகக் கொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஹர்திக் பாண்ட்யா தான் சம்பாதித்து வாங்கிய சொத்துகளை அவருடையா தாயாரின் பெயரில்தான் வாங்கி வைத்திருக்கிறாராம். அதனால் பெரிய தொகை ஒன்றும் நடாஷாவுக்குக் கிடைக்கப் போவதில்லை என சொல்லப்படுகிறது.