Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அப்ரிடியின் சர்ச்சை பதிவிற்கு பதிலடி கொடுத்த காம்பீர்

gambir
Last Updated: புதன், 4 ஏப்ரல் 2018 (15:41 IST)
காஷ்மீர் குறித்து டுவிட்டரில் சர்ச்சை கருத்து பதிவிட்ட அப்ரிடிக்கு, இந்திய கிரிகெட் வீரர் கெளதம் காம்பீர் பதிலடி கொடுத்துள்ளார்.
 
காஷ்மீர் விவகாரம் குறித்து நீண்ட வருடங்களாக பாகிஸ்தானுடன், இந்தியாவுக்கு பிரச்சனை உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் அப்ரிடி,  இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியால் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலை  குரல்களை ஒடுக்க அங்கு அப்பாவிகள் பலியாகின்றனர். ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எங்கே சென்றது, இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை? என டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
a
 
இதற்கு பதிலடி தரும் வகையில் காம்பீர் வெளியிட்ட பதிவில், ‘‘காஷ்மீர் தொடர்பாக அப்ரிடியின் ட்விட்டிற்கு பதில் அளியுங்கள் என்று என்னிடம் ஊடகங்கள் கருத்து கேட்கிறது. இதில் சொல்வதற்கு என்ன இருக்கிறது?. அப்ரிடி தனது அகராதியில் ஐக்கிய நாடுகள் (UN) என்றால் அண்டர் நைண்டீன் (Under Ninteen) என்று அர்த்தம் புரிந்துள்ளார். ஊடகங்கள் இது குறித்து கவலை கொள்ள வேண்டாம். இது அப்ரிடி நோ-பால் பந்தில் விக்கெட் விழுவதை கொண்டாடுவது போன்றது’’என பதிவிட்டிருந்தார்.


இதில் மேலும் படிக்கவும் :