Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர்: அப்ரீடி சர்ச்சை டிவிட்...

Last Updated: செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (21:24 IST)
பாகிஸ்தான் அணி கிரிக்கெட் வீரர் அப்ரீடி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவு ஒன்று தற்போது விமர்சனங்களுக்கும் கண்டனங்களுக்கும் உள்ளாகியுள்ளது. 
 
அப்ரீடி, இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீரில் நிலவும் சூழ்நிலை அச்சுறுத்துவதாகவும், கவலையளிப்பதாகவும் உள்ளது. அடக்குமுறை ஆட்சியால் காஷ்மீர் சுயநிர்ணய உரிமை மற்றும் விடுதலை  குரல்களை ஒடுக்க அங்கு அப்பாவிகள் பலியாகின்றனர். ஐ.நா மற்றும் பிற சர்வதேச அமைப்புகள் எங்கே சென்றது, இவர்கள் ஏன் இந்த ரத்தம் சிந்துதலை தடுக்க முயற்சிகள் எடுக்கவில்லை? என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 
 
இந்திய ஆக்ரமிப்பு காஷ்மீர் என குறிப்பிட்டு உள்ளதால் இது தற்போது சர்ச்சைகுள்ளாகியுள்ளது. அப்ரீடியை பலர் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். 
 
தெற்கு காஷ்மீரில் 11 பயங்கரவாதிகளை இந்திய பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதை அடுத்து இதுபோன்ற கருத்து வெளியானது இணையவாசிகளின் கோபத்தை மேலும் தூண்டியுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :