முன்னாள் அதிபருடன் கோல்ஃப் விளையாடிய தோனி..போட்டோ வைரல்
அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் தோனி கோல்ஃப் விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டியில் சென்னை கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுடன் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்புடன் தோனி கோல்ஃப் விளையாடும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
அதாவது, டொனால்ட் டிரம்ப் அழைப்பின் பேரில் தோனி கோல்ஃப் விளையாட சென்றதாக தகவல் வெளியாகிறது.
இதற்கு முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரஸ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றை தோனி நேரில் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.