Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

காயம் காரணமாக முதல் 3 போட்டிகளில் டி வில்லியர்ஸ் விலகல்

Last Modified புதன், 31 ஜனவரி 2018 (12:36 IST)
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 6 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது, இதில் முதல் 3 போட்டிகளில் தென் ஆப்ரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் டி வில்லியர்ஸ் பங்கேற்கமாட்டார் என தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 

 
இந்திய அணிக்கு எதிரான  மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டி வில்லியர்ஸ் விளையாடிய போது, அவரின் கை விரலில் ஏற்பட்ட காயத்திலிருந்து முழுமையாக குணமடைய சில வாரங்கள் தேவைப்படுவதால் அவர் விளையாடமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
 
இந்தியாவுக்கு எதிராக டி வில்லியர்ஸ் பங்கேற்ற 29 போட்டிகளில் அவர் 1295 ரன்கள் அடித்துள்ளார். இதில் 6 சதங்கள் 5 அரைசதங்கள் அடங்கும்.
 
டி வில்லியர்ஸ் இல்லாதது இந்தியாவுக்கு சாதகமாகவும், தென் ஆப்ரிக்காவுக்கு பாதகமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :