Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஐசிசி தர வரிசையில் விராட் கோலி முதலிடம்..


Murugan| Last Modified செவ்வாய், 13 ஜூன் 2017 (19:31 IST)
ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசைப்பட்டியலில் டி வில்லியர்சை பின்னுக்கு தள்ளி விராட் கோலி முதல் இடத்தை பெற்றுள்ளார்.

 

 
ஐசிசி (சர்வதேச கிரிக்கெட் வாரியம்) அவ்வப்போது கிரிக்கெட் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று காலை அந்த பட்டியலை வெளியிட்டது. அதில், 862 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தை பிடித்துள்ளார். அதேபோல், ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர்  861 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்துள்ளார். இதற்கு முன் இந்த பட்டியலில் முதல் இடம் பிடித்திருந்த டி வில்லியர்ஸ் 847 புள்ளிகள் பெற்றும் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 
 
அதேபோல், டெஸ்ட் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்கள் பட்டியல் முதல் இரண்டு இடத்தை இந்திய வீரர்களான ஜடேஜா 898 புள்ளிகளுடனும் முதலிடத்திலும், 865 புள்ளிகள் பெற்று அஷ்வின் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர். முதல் 10 இடங்களில் இவர்கள் இருவரை தவிர வேறு எந்த இந்திய பந்து வீச்சாளர்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :