Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

கோலியின் அடுத்த இலக்கு... சுனில் கவாஸ்கர்: ஐசிசி தகவல்!

Last Modified திங்கள், 29 ஜனவரி 2018 (20:07 IST)
ஐசிசி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசை புள்ளி பட்டியலை வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் கோலி 912 புள்ளிகல் பெற்று முன்னிலைக்கு வந்துள்ளார். அதோடு மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரையன் லாரவை முந்தியுள்ளார்.

இது குறித்து ஐசிசி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியுள்ளதாவது, ஐசிசி அமைப்பின் சிறந்த கிரிக்கெட் வீரராக தேர்வு செய்யப்பட்ட விராட் கோலி, மற்றொரு மைல்கல்லையும் எட்டியுள்ளார்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 900 புள்ளிகளில் இருந்து 912 புள்ளிகளுக்கு உயர்ந்துள்ளார். இதன் மூலம் ஐசிசி டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மன் தரவரிசை பட்டியலில் 31வது இடத்தில் இருந்து 26வது இடத்துக்கும் அவர் முன்னேறியுள்ளார்.
அடுத்ததாக முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் சாதனையை எட்டிப்பிடிக்க அவருக்கு வாய்ப்பு உள்ளது. சுனில் கவாஸ்கர் 916 புள்ளிகள் பெற்றுள்ள நிலையில் அவரை எட்டிப்பிடிக்க கோலிக்கு இன்னும் 5 புள்ளிகள் மட்டுமே தேவை என குறிப்பிடப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :