திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 4 ஏப்ரல் 2023 (08:02 IST)

‘இதை மட்டும் செய்யலன்னா சி எஸ் கே அணிக்கு வேறு கேப்டன்தான்’ –தோனி கமெண்ட்!

சி எஸ் கே மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையில் நேற்று நடந்த போட்டியில் ரன்மழையை இரண்டு அணிகளும் பொழிந்தன. சி எஸ் கே அணி நிர்ணயித்த 217 ரன்கள் இலக்கை கடைசி வரை துரத்திய லக்னோ அணி 205 ரன்கள் மட்டுமே சேர்த்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் சி எஸ் கே பவுலர்கள் ஏராளமான வொய்ட் மற்றும் நோ பால்களை வீசினர். முதல் போட்டியிலும் இதுபோல தவறுகளை செய்தனர். இதுபற்றி போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் தோனி ‘நான் ஏற்கனவே இதுபற்றி எச்சரிக்கை செய்தேன். இப்போது இரண்டாவது முறையாகவும் சொல்கிறேன். அவர்கள் நோபால் மற்றும் வொய்ட் வீசுவதைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் வேறு கேப்டனோடுதான் விளையாட வேண்டி இருக்கும்” என எச்சரிக்கும் விதமாக பேசியுள்ளார்.