செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (23:37 IST)

வீரர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும்- ராகுல் டிராவிட்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இன்று ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் குறித்து பயிற்சியாளர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், அணியில் விளையாடும் வீரர்களின்  மன நலம் மற்றும் உடல்நலம் முக்கியம். அவர்களின் வேலைப்பளுவை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் கிரிக்கெட் தொடர்களுக்காக நம் வீரர்களைத் தயாராக வைக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்துவெளியேறியது குறிப்பிடத்தக்கது.