செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (22:53 IST)

எவரையும் தாக்கிப் பேசக் கூடாது- ’ஜெய்பீம்’ பட விவகார்த்தில் சந்தானம் பதில்!

ஜெய்பீம் பட விவகாரம் குறித்து நடிகர் சந்தானம் கருத்து தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெர்றுள்ளது.

இந்நிலையில், இன்று செய்தியாளர் சந்திப்பின்போது ஜெய்பீம் பட விவகாரம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு, #westandsuriya பற்றி தனக்குத் தெரியாது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:  எந்த ஒரு கருத்தையும் தூக்கிப்பேசலாம்; எவரையும் தாக்கிப் பேசக் கூடாது எனத் தெரிவித்துள்ளார்.