செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 16 நவம்பர் 2021 (21:10 IST)

பார்வதி அம்மாளை சந்தித்து நிதி உதவி செய்த நடிகர் சூர்யா!

ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை நடிகர் சூர்யா சந்தித்து அவருக்கு ரூ. 15 லட்சம்  பண உதவி செய்தார்.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்துள்ளதாக பரவலாக நல்ல பாராட்டைப் பெற்றுள்ளது.

இந்நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் , சமீபத்தில் சூர்யாவுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அதில்,  ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளுக்கு படத்தயாரிப்பு நிறுவனம் உதவி செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

 இதையத்து இன்று ராஜாகண்ணுவின் மனைவி பார்வதி அம்மாளை நடிகர் சூர்யா சந்தித்து அவருக்கு ரூ. 15 லட்சம்  பண உதவி செய்தார். இந்தச் சந்திப்பில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தனர்.