1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (18:01 IST)

5 விக்கெட்களை இழந்த பங்களாதேஷ்… வெற்றியை நோக்கி இந்தியா!

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர்களில் 409 ரன்கள் குவித்த நிலையில் வங்கதேச அணிக்கு 410 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இன்றைய போட்டியில் இளம் வீரர் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்தார் என்பதும் விராட் கோலி சதம் அடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் பின்னர் வந்த பேட்ஸ்மேன்கள் சீக்கிரம் அவுட் ஆனதால் இலக்கு 400 ரன்களுக்குள் சுருண்டது.

இதையடுத்து 410 ரன்கள் என்ற இமாலய இலக்கோடு களமிறங்கிய பங்களாதேஷ் அணி  143 ரன்கள் மட்டுமே சேர்த்து 5 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இதனால் இந்த தொடரின் முதல் வெற்றியை இந்திய அணி எட்டும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.