செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 டிசம்பர் 2022 (16:39 IST)

முதல் சதமே இரட்டை சதமே… இஷான் கிஷான் இன்றைய போட்டியில் படைத்த சாதனைகள்!

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையே இன்று நடைபெற்று வரும் 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் இஷான் கிஷான் இரட்டை சதம் அடித்த நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இஷான் கிஷான் 130 பந்துகளில் 210 ரன்கள் அடித்து உள்ளார் என்பதும் அதில் 24 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்சர்கள் அடங்கும். அவர் 126 பந்துகளில் 200 ரன்கள் சேர்த்தார். இதுவரை அடிக்கப்பட்ட இரட்டை சதங்களிலெயே  இதுதான் அதிவேக சதம். அதுமட்டுமில்லாமல் இஷான் கிஷான் தன்னுடைய முதல் சர்வதேச சததத்தையே இரட்டை சதமாக மாற்றிய பெருமை இஷான் கிஷானையே சேரும்.

23 வயதாகும் இஷான் கிஷான் குறைந்த வயதில் ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.