ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick

இந்தியா இறங்கிய சில நிமிடத்தில் வேலையை காட்டிய மழை! – கைவிடப்பட்டது டெஸ்ட் தொடர்!

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பிரிஸ்பேன் டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வந்த நிலையில் மழை காரணமாக தொடர் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா – இந்தியா இடையேயான சுற்றுப்பயண ஆட்டங்கள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் உள்ள நிலையில் மூன்றாவது டெஸ்ட் ட்ரா ஆனது. இந்நிலையில் தற்போது நடந்து வரும் நான்காவது டெஸ்ட் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் முதலாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 369 எடுத்த நிலையில் இந்தியா 336 பெற்றிருந்தது. இந்நிலையில் தற்போது முடிந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 294 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் டேவிட் வார்னர் 48 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், ஸ்மித் நின்று ஆடி அரைசதம் வீழ்த்தினார். இந்திய பவுலர்களான சிராஜ் 5 விக்கெட்டுகளையும், தாகுர் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இந்த இன்னிங்ஸில் நடராஜன் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

இந்நிலையில் தற்போது களமிறங்கிய இந்திய அணி 4 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ய தொடங்கியதால் ஆட்டத்தை தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் மழை வலுவடைய தொடங்கியுள்ளதால் 4வது டெஸ்ட் போட்டியின் 4வது நாள் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்தியா வெற்றி பெற 324 ரன்கள் இலக்காக இருந்த நிலையில் ஆட்டம் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.